உலகிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இணைய தொடராக ” லார்ட் ஆஃப் ரிங்ஸ்; தி ரிங்ஸ் ஆப் பவர் ” உள்ளது. மேலும் இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரிதலும் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக படம் எடுக்க பயன்படுத்தும் கேமராக்களில் இருந்து இதர தொழில்நுட்ப பொருட்களிலிருந்து அனைத்துமே காலத்திற்கு தகுந்தார் போல மாற்றமடைந்து கொண்டு வருகிறது.
இவ்வாறு குறிப்பிட கையில், ஆரம்ப காலகட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கப்பட்டது குறைவான பொருட்ச அளவில் படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 300 கோடி ரூபாய் இருந்தால் ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுத்து விடலாம்.
சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்புத்துறையிலும் முன் அனுபவமும், செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பட்ஜெட் என்பது எப்போதும் ஒரு பொருட்டே அல்ல. அதன்படிதான் தற்போது ஹாலிவுட் சினிமாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.
தொலைக்காட்சி தொடருக்காக அதிகபட்ஜெட் செலவிடப்பட்டு, அதுவும் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெறுவது என்பது இதுவே உலக அளவில் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
மேலும், லார்ட் ஆஃப் ரிங்ஸ்; தி ரிங்ஸ் ஆப் பவர் தொடரின் ஒரு எபிசோடிற்காக மட்டும் ரூ.500 செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.