வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட் !! குதுகலத்தில் அஜித் ரசிகர்கள்!!

Photo of author

By Vijay

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட் !! குதுகலத்தில் அஜித் ரசிகர்கள்!!

Vijay

Here comes the persistence update

cinema: நீண்ட நாட்களாக எதிர் பார்த்த நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைபடத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர்  குறித்து அப்டேட்  வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார், இயக்குனர் மகிழ் திருமேனி  இணைந்து திரைக்கு வர உள்ள படம் தான் விடாமுயற்சி.

அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த பட பணிகள் நடைபெற்றது. ரசிகர்களிடையே  இந்த படம்   பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி டீசர் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வெளியாகும் .

  இதனிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. படம் தொடங்கிய சில நாட்களிலேயே ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் என அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார் இயக்குனர் ஆதிக். இந்த படம்  2026 ஆம் வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி வருகிறது.