சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல நலத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.இதில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் அஞ்சல் துறையானது செல்வமகள் சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,வருங்கால வைப்பு நிதி,தேசிய சேமிப்பு பத்திரம்,கிசான் விகாஸ் பத்ரா,மாதாந்திர சேமிப்பு திட்டம் போன்ற நல்ல நல்ல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வங்கியில் உள்ள சேமிப்பு திட்டங்களை விட போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் அமோக வரவேற்பு கிடைத்த வண்ணம் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அதிகப்படியான வட்டி தான்.இப்பொழுது போஸ்ட் ஆப்ஸின் மாதாந்திர வருமானத் திட்டம் பற்றி விவரமாக அறிந்து கொள்ளுங்கள்.
மாதாந்திர சேமிப்பு திட்டம்
இது ஐந்தாண்டு சேமிப்பு திட்டமாகும்.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.9,00,000 வரை முதலீடு செய்ய முடியும்.நீங்கள் கூட்டு கணக்கு தொடங்கினால் ரூ.15,00,000 வரை முதலீடு செய்ய முடியும்.
தற்பொழுது இத்திட்டத்திற்கு 7.4% வட்டி வட்டி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் முதலீடு செய்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாதந்தோறும் வட்டி வழங்கப்படும்.இத்திட்டத்திற்கு வருமானவரி வரி 80c பிரிவிற்கு கீழ் ஆண்டிற்கு ரூ.1,50,000 வரை வரி சலுகை கிடைக்கும்.
நீங்கள் இத்திட்டத்தில் இருந்து மாதம் ரூ.5000 வருமானம் ஈட்ட ரூ.8,00,000 முதலீடு செய்ய வேண்டும்.மாதந்தோறும் தங்களால் உரிய தொகை எடுத்துக்க வைக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட்டில் முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம்.இந்த வட்டி தொகையை கொண்டு போஸ்ட் ஆபிஸ் RD கணக்கை தொடங்கி அதில் இருந்து வட்டி பெறலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆதார்,பான் கார்டு,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,வோட்டர் ஐடி போன்றவை முக்கிய ஆவணங்களாகும்.