இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளி என்பது அனைவராலும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை. இந்த பண்டிகை அந்த இடத்திற்கும் ஏற்ப முறைகளும், பெயர்களும் மாறுபாடு உள்ளது என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தென்இந்திய உணவு முறைகளும் வட இந்திய உணவு முறைகளும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தீபாவளி அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, அதன் பின்னர், வீட்டில் செய்த பலகாரங்களை உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து, காலை உணவாக இட்லி, ஆட்டுக்கறி குழம்பு எடுத்துக்கொள்கிறார்கள். அதே போல தான் தென் மாவட்டங்களில் ஆட்டுக்கறி குழம்பு, மீன் வகைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் வட இந்தியாவில் தீபாவளி என்பதை அம்மனுக்கு உகந்ததாக பார்க்கப்பட்டு, எந்த ஒரு அசைவ உணவும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நமது ஊரில் தீபாவளி நரகாசுர வதமாகப் பார்க்கப்படுகிறது. இதில் தமிழ் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தீபாவளி என்பது நமது கலாச்சாரத்தில் அப்படி ஒரு பண்டிகையே இல்லை என கூறியுள்ளார். தொலைக்காட்சி வந்த பிறகுதான் தீபாவளி என்பது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியது.
கிராமப்புறங்களில் மிக பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல் மட்டும் தான் என கூறினார். மேலும் தமிழர்களுக்கும் தீபாவளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட காரணம் காலபோக்கில் வந்த வர்த்தகம் தான் இதனை பெரிய பண்டிகையாக மாற்றியது. தீபாவளி கடந்த 20 ஆண்டுகளாக மட்டும் தான் கொண்டாடப்படுகிறது என கூறியுள்ளார்.