இந்தியா நியூசிலாந்து இடையிலான தொடரின் கடைசி போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்திய அணியின் முக்கிய ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வி அடையாத இந்திய அணியின் சாதனையை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி உடைத்துள்ளது.
கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.ஹர்பஜன் சிங் போன்ற சீனியர் பிளேயர்கள் நீக்கப்பட்டு அஸ்வின் ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் அணிக்கும் கொண்டுவரப்பட்டது.
அதே போல் இம்முறையும் சீனியர் பிளேயர்கள் நீக்கப்பட்டு புதிய மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது பிசிசிஐ. இதனால் நியூசிலாந்து தொடரின் கடைசி போட்டி ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.