TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் க்கு எதிராக தேசிய லீக் கட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாடானது கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.இது பேசிய விஜய் நேரடியாக திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து பேசினார்.இவருக்கு தேமுதிக,அதிமுக பாமக என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது ஓர் பக்கம் இருக்க திமுக நாம் தமிழர்,என பலரும் தங்களது எதிர்ப்புக்களை விமர்சனங்களாக முன் வைக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவரும் விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ளார்.இவர் ஆரம்பகட்டத்திலேயே பல திரைப்படங்களில் முஸ்லீம்களை தீவீரவாதிகளாக காட்டி நடித்துள்ளார்.
இதனை மறுக்கும் விதம் கட்டாயம் எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும் இந்த காரணத்தினால் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளமே தவிர தனிப்பட்ட பிரச்சனையென்று ஏதும் இல்லை. அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கட்டாயம் எங்களது சமூகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்காது என கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து தற்பொழுது வரை விஜய்-யிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட்டவில்லை.முன்னதாகவே பாசிச அரசியல்,குடும்ப ஊழல் என திமுக பாஜக இருவரையும் தாக்கியதே இரு கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எழுந்த எதிர்ப்பு மீண்டும் அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் விதத்தில் உள்ளது.இருப்பினும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு முழு ஆதரவோடு இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.