கடந்த 27 ஆம் தேதி விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவரின் கருத்துக்கள் பலரை சூடேற்றியுள்ளது. ஆரம்பத்தில் ஆதரவளித்தவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள்.
விஜய் முதலில் கட்சி தொடங்கிய போது அதனை திருமாவளவன் ஆதரித்து பேசினார் ஆனால் தற்போது கடுமையாக எதிர்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் மீதான அரசியல் பிரச்சனையின் போது விஜய்க்கு ஆதரவாக பேசியவர் சீமான், அவர் கட்சி தொடங்கிய பின் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வந்தார்.மாநாட்டிற்கு பிறகு அவருடன் கூட்டணி வைக்க வாய்பே இல்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நடிகர் மற்றும் திமுக ஆதரவாளர் ஆகிய போஸ் வெங்கட் அவரது இணையதள x தளத்தில் “யப்பா உன் கூடவுமா அரசியல் பண்ணனும் பாவம் அரசியல் பள்ளிகூட ஒப்பிப்பு சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி வியப்பு எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன் முடிவு பார்ப்போம்” என்று கூறியது வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் விஜய்யைப் பிடிக்கவில்லை என்று எங்கேயும் கூறியதில்லை எனக்கு பிடித்த நடிகர் விஜய் தான். இவ்வளவு ஏன் அவர் போஸ்டர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் எங்கேயும் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறவே இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.