Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது.
அதனை பார்த்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் கண்காணிப்பு கேமராவில் கார் வந்ததை வைத்து கண்டுபிடித்தனர். அதன் உரிமையாளர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரித்தபோது குற்றவாளிகள் ஒடிசா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமை செய்து அடித்து கொலை செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. தினமும் அடித்து நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி, பிறகு சுடு தண்ணீர் கொண்டு வர கூறி உள்ளார்கள். அந்த சுடு தண்ணீர் கீழே கொட்டியதால் அந்த பெண்ணை அடித்து உள்ளார். அந்த பெண் வலியால் துடித்து இறந்து விட்டது.பிறகு அந்த சடலத்தை சூட்கேசில் போட்டு மறைத்து சேலம் பகுதியில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது.