சிவாஜி கையில் இருந்து நழுவிய பட வாய்ப்பு!! எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற படம்!!

0
297
Film opportunity slipped from Shivaji's hand!! A successful film starring MGR!!
Film opportunity slipped from Shivaji's hand!! A successful film starring MGR!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி அவர்கள் நடிக்க வேண்டிய படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். ஏன் சிவாஜி அவர்கள் இப்படத்தில் நடிக்கவில்லை என எம் எஸ் வி அவர்கள் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

1974 ஆம் ஆண்டு புதுமை இயக்குனரான ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் தான் “உரிமைக்குரல்”. இப்படத்தில் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு வாலி மற்றும் கண்ணதாசன் இருவரும் பாடல்களை எழுத எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் எம்ஜிஆர் இருவரும் இணைந்து முதலில் பணியாற்றிய படம் தான் “அன்று சிந்திய ரத்தம்” . ஆனால் இந்த படம் முழுமை பெறவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் சிவாஜியை வைத்து படம் எடுக்க தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு பொருளாதார நெருக்கடி அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர் ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில் ஸ்ரீதர் எம் ஜி ஆர் – யிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அவரும் பழைய கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் கால்ஷீட் கொடுத்துள்ளார். இவ்வாறு உருவான படம் தான் உரிமைக்குரல்.

உரிமை குரல் படம் என்பது ஒரு பண்ணையாருக்கும் ஒரு விவசாயிக்கும் இடையே நடக்கும் மோதல் தான். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. இதன் மூலம் வந்த வருமானத்தில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தன்னுடைய அனைத்து கடனையும் அடைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்!! ஏ ஆர் முருகதாஸின் தீபாவளி இணைப்பு!!
Next articleதமிழ் சினிமா துறையில் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லாததற்கு பதில் அளிக்கிறார் இளையராஜா!!