கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கப் போகும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
நடிகர் சூர்யாவின் தம்பியும், தமிழ் சினிமா துறையில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்பவர்தான் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது வரையில் 27 படங்களில் நடித்துள்ளார். இதில் 20 படங்கள் இவருக்கு ஹிட் படமாக அமைந்துள்ளது.குறிப்பாக இவர் நடிக்க ஆரம்பித்த முதல் படமான பருத்திவீரன் முதல் பையா, தோழா, கடைக்குட்டி சிங்கம், சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், கொம்பன், கைதி, சர்தார், தீரன் அதிகாரம் 1 மேலும் தற்பொழுது வெளியாகி உள்ள மெய்யழகன் வரை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தற்பொழுது ஹிந்தி மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார். அந்த படங்களின் வேலை முடிந்தவுடன் கஜினி 2 படத்தை இயக்க நடிகர் சூர்யாவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் உருவாக்க இருக்கும் படத்தினையும் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சூர்யா ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் – ல் தயாரிக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ நடிகர் கார்த்தி என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.