தீபாவளி என்றாலே இருளை போக்கி வெளிச்சை ஏற்படுத்தும் நாள் என்று அர்த்தம்.இந்நன்னாளில் வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் புகுவாள் என்று அர்த்தம்.அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
ராமர் ராவணனை வென்று அயோத்தி திரும்பிய நாள் மற்றும் கிருஷ்ணர் நரகாசுரனை வென்ற நாளாக தீபாவளி கொண்டப்படுகிறது.இந்நாள் தீமைகள் அழிக்கப்பட்டதை நாளாகவும்,அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும் நாளாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நாளில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.இந்நாளில் தீபம் ஏற்றுவதால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்றாலும் எந்த எண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.
நல்லெண்ணெய் தீபம்:
உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட நல்லெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்.நல்லெண்ணய் மகாலட்சுமிக்கு உரிய எண்ணெய் ஆகும்.இந்த எண்ணையில் தீபம் போட்டால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்துபோகும்.
கடுகு எண்ணெய் தீபம்:
வீட்டில் கண் திருஷ்டி,தீய சக்திகள் ஒழிய கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றலாம்.மன ஆரோக்கியம் மேம்பட உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள கடுகு எண்ணையில் தீபம் போடலாம்.கர்ம வினைகள் அனைத்தும் நீங்க கடுகு எண்ணையில் தீபம் போடலாம்.
நெய் தீபம்:
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க மகாலட்சுமியின் அருள் கிடைக்க அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் போடலாம்.நெய் தீபம் ஏற்றுவதால் நம் கர்மவினைகள் அனைத்தும் அழிக்கப்படுபட்டுவிடும்.