கொரோனா மற்றும் பன்றி காய்ச்சால்.. பொதுசுகாதாரத்துறை விட்ட எச்சரிக்கை!!

0
97
Public Health Department has issued a warning
Public Health Department has issued a warning

Virus: பொது சுகாதாரத்துறையானது தற்பொழுது பரவி வரும் ஆர் எஸ் வி தொற்றுக் குறித்து அலர்ட் செய்துள்ளது.

பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பெரும்பாலோனருக்கு சளி இருமல் போன்ற வைரஸ் தொட்டுக்கல் அதிகரிக்க ஆரம்பித்தது. இது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியத்தில் தற்பொழுது ஆர் எஸ் வி தொற்று அதிகப்படியான பேருக்கு பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் போன்று தீவிரமாக இருக்காது இது குறித்து பயப்பட தேவையில்லை என்று தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்களின் மாதிரிகளை எடுத்து பொது சுகாதாரத்துறை சோதனை செய்ததில் 65 சதவீதம் பேருக்கு இந்த ஆர் எஸ் வி தொற்று பாதிப்பு இருப்பதாகவும் மீதம் உள்ளவர்களுக்கு இன்புளுயன்சா பி வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த தொற்று பாதிப்புகள் அனைத்தும் ஏழு நாட்களுக்குள் குணமாகிவிடும், மேற்கொண்டு வீட்டில் உள்ள வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த தொற்று பாதிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஓசல்டாமிவிர் என்ற மருந்து கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். இவையனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேற்கொண்டு மக்கள் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் நோய் தொற்று பாதித்தவர்கள் யாரேனும் வீட்டிலிருந்தால் அவர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு பராவத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleயார் இந்த அஞ்சலையம்மாள்? தென்னாட்டு ஜான்சிராணி வரலாற்றை கையிலெடுத்த விஜய்யின் தவெக 
Next articleரயில்வே துறைக்கு அபராதம்!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!!