TVK Congress: விஜய் கட்சி தொடங்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பிறகு திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகள் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சியின் இருப்பவர்களே விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் அளித்துள்ளனர். குறிப்பாக மாநாட்டின் இறுதியில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் தெரிவித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன் என்பவர் முதல்வருக்கு உடனடியாக கடிதமும் எழுதினார். அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் என்பவரும் ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விஜய்யின் மாநாடு குறித்து கூறியிருப்பதாவது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியால் எந்த ஒரு பாதிப்பும் இந்தியா கூட்டணிக்கு ஏற்படாது. மேலும் அது பலத்தை தான் ஏற்படுத்தும்.
எங்களுக்கு பங்கு வேண்டுமென்றால் 2006 ஆம் ஆண்டே தமிழகத்தில் கேட்டிருப்போம். ஆனால் சோனியா காந்தி, கலைஞர் தான் முதல்வராக தமிழகத்திலிருக்க வேண்டுமென நினைத்தார். அச்சமயத்தில் நாங்கள் ஆட்சியில் பங்கு வேண்மென கேட்டிருந்தாலும் கொடுக்க வேண்டிய நிலையில் தான் திமுக இருந்தது கட்டாயம் கொடுத்திருக்கும் என கூறினார்.
மேற்கொண்டு செய்தியாளர், விஜய் கட்சி தொடங்குவதற்கு ராகுல் காந்தி தான் காரணம்? எனக் கூறுகிறார்கள் உண்மையா என கேள்வி எழுப்பினார். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என செல்வபெருந்தகை பதிலத்துள்ளர்.