செம்பு(காப்பர்) பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அறிந்த ஒன்று தான்.நம் முன்னோர்கள் காலத்தில் செம்பு பாத்திரத்தின் பயன்பாடு அதிகளவு இருந்தது.குறிப்பாக தண்ணீர் குடிக்க காப்பர் உலகோத்தல் ஆன குடம் மற்றும் குவளைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இன்று செம்பு பாத்திரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும்.மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகள் குணமாக செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வரலாம்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு இதய ஆரோக்கியம் மேம்படும்.செம்பு பாத்திர நீர் தைராய்டு செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
ஆனால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் சில தீமைகளும் ஏற்படும்.இரவு நேரங்களில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.உணவு உட்கொண்ட பிறகு செம்பு பாத்திரத்தில் ஊற்றிவைத்த தண்ணீரை குடித்தால் வயிற்றுவலி,வாயுத் தொல்லை,அமிலத்தன்மை பாதிப்பு ஏற்படக்கூடும்.
செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து நீண்ட நேரமான தண்ணீரை குடித்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அளவிற்கு அதிகமாக செம்பு பாத்திர நீர் அருந்தினால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.