தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆன நேற்று தமிழ்நாடு தினம் என்று கூறி தனது X தல பக்கத்தில் வாழ்த்துக்களை வெளியிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1 எனவும், தமிழர்கள் தினத்தை இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமோ 1968 ஆம் ஆண்டு ஜூலை 18-இல் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். முன்னதாக தனி மாநிலம் அமைந்த நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், திமுக அரசு அதனை மாற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாற்று பெயர் அமைக்கப்பட்ட நாளெல்லாம் தமிழ்நாடு தினம் என்று அழைக்க முடியாது. முதன் முதலில் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதி தான் தமிழ்நாடு தினம் என்று கூறி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.