தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அமரன் திரைப்படம் “முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ்” ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் ஆகும்.
மேலும் இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே 42.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமரன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.
மேஜர் முகுந்த் அவர்களின் பயோ பிக்கில் நடிக்க சாய் பல்லவி அவர்கள் இயக்குனரிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதன்பிறகு தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஜ வாழ்க்கையினை அப்படியே பிரதிபலிப்பதாக இந்த அமரன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசனும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்தி இருக்கிறார்.
உண்மையான மேஜர் முகுந்த் அவர்களின் தந்தையார் வரதராஜன் அவர்கள் கூறும் பொழுது, என் மகனுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்றும், தனது மகன் இறந்த பொழுது மருமகளுக்கு 31 வயதே ஆன நிலையில் அவருடைய தந்தை மற்றும் தமையனிடம் இந்துவின் மறுமணம் குறித்து நான் பேசினேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதற்கு இந்து அவர்கள் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்று நீங்கள் நினைத்தீர்களா அப்பா என்று கேட்டிருப்பது, முகுந்த் மற்றும் இந்துவின் ஆழமான காதலுணர்வை அனைவரது மனதிலும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.