பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன் மற்றும் ரம்பா நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி படத்தில் பிரபு தேவா மற்றும் அப்பாஸிற்கு நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
இந்த படத்திற்கு ரஞ்சித் பாரொட் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த எல்லாப் பாடல்களுமே விறுவிறுப்பாக இருக்கும். மயிலு மயிலு, மின்னல் ஒரு கோடி, ஈச்சங்காட்டுல முயல், நேற்று நோ நோ, இந்திரன் அல்லெ என்ற இந்தப் பாடல்கள் எல்லாமே ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதாக இருந்தது.
இந்த பாடல்களில் எல்லாம் பிரபுதேவா தன்னுடைய தனித்துவமான நடன அசைவுகளால் அனைவரையும் கட்டி போட்டு இருப்பார். இதனால் தானோ என்னவோ இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கின்றனர்.
மேலும் இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அப்பாஸும் பிரபுதேவாவும் ஒருவருக்கு ஒருவர் இணையான கதாபாத்திரங்களாகவே உள்ளனர். இந்த இருவருக்கும் இந்த படத்தில் விக்ரம் அவர்கள் தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்ற தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.
விக்ரம் தமிழ் சினிமா துறையில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல படங்களில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதிமல்லி படத்தில் வினித்துக்கு இவர் தான் டப்பிங். காதல் தேசம் படத்தில் அப்பாஸ்சுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். அஜீத்துக்கும் டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதி, பாசமலர்கள், உல்லாசம் படங்களில் விக்ரம் தான் அஜீத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ஆனால் ஒரே படத்தில் இரு ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தது தான் பெரிய ஆச்சரியம்.
விஐபி படத்தில் பிரபுதேவா, அப்பாஸ் இருவருக்குமே குரல் கொடுத்தது நடிகர் விக்ரம் தான். அந்தக் காலத்தில் பிரபுதேவா சொந்தக் குரல்ல பேசி நடிக்கல என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் வாசகரின் கேள்வி ஒன்றுக்கு இவ்வாறாக பதிலளித்திருந்தார்.