இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஈரான் அரசு உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்காக இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியது. அதனோடு மட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு இரண்டாம் கட்டமாக உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – லெபனான் – இஸ்ரேல் போர் தற்பொழுது உச்சம் அடைந்து உள்ளது. இது உலகப் போராக மாறக்கூடும் என்ற பயம் அனைத்து நாட்டு மக்களுக்கும் உள்ளது. மேலும் இந்த போர் உச்சம் பெறும் பொழுது அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என்ற பயமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், ஈரான் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. அதில், ஈரான் அரசு ” ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகளின் வான்வெளியை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.