சரும பிரச்சனைகளில் ஒன்று வெண்புள்ளி மற்றும் கரும்புள்ளி.சருமகத்தில் ஆங்காங்கே வெண் திட்டுக்கள் தென்படும்.இந்த வெண்திட்டு பாதிப்பை அலட்சியம் கொள்ளாமல் இயற்கையான முறையில் எளிதில் போக்கிவிடலாம்.
இதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கீழே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பொருட்கள்:
1)படிகாரம் – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
5)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
படிகாரம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு படிகாரம் எடுத்து வாணலியில் போட்டு வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய்,1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாறை அதில் பிழிந்துவிடவும்.
அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் அரைத்த படிகாரத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.முக்கியமாக மூக்கின் இருபுறம்,கன்னத்தில் அதிகமாக அப்ளை செய்யவும்.
காரணம் இந்த பகுதிகளில் தான் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் அதிகளவு காணப்படும்.இந்த பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்த பிறகு எலுமிச்சை தோலை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் அனைத்தும் எளிதில் நீங்கிவிடும்.