பெண்களே உங்களுக்கு வளரும் மீசை முடிகளை ஒரு ஸ்பூன் சர்க்கரை வைத்து நிரந்தரமாக நீக்கிவிடலாம்!!

0
85
Ladies you can get rid of ingrown mustache hair permanently with a spoonful of sugar!!
Ladies you can get rid of ingrown mustache hair permanently with a spoonful of sugar!!

பெண்களுக்கு அழகே அவர்களது முகம் தான்.இந்த அழகான முகத்தில் ஆண்களை போல் தாடி,மீசை முடி காணப்பட்டால் அது அசிங்கமாக தெரியும்.இதற்கு இயற்கை பொருட்களை கொண்டு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.அதன் பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி மூக்கிற்கு கீழ் அப்ளை செய்து நன்கு உலர விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி பேஸ்ட்டை ரிமூவ் செய்யவும்.இதுபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் ஒரே மாதத்தில் மீசை முடி வளர்வது நின்றுவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)முட்டை வெள்ளைக்கரு – ஒன்று
2)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும் .பிறகு அதில்
இரண்டு
தேக்கரண்டி கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் மீது அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு காயவிடவும்.

அதன் பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவவும்.இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவைற்ற முடிகள் அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கோரைக்கிழங்கு பொடி – 1/2 தேக்கரண்டி
2)பூலாங் கிழங்கு பொடி – 1/2 தேக்கரண்டி
3)கஸ்தூரி மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
4)குப்பைமேனி பொடி – 1/4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

இந்த பொடிகள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.இந்த பொடிகள் அனைத்தையும் சொல்லப்பட்டுள்ள அளவு படி ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.

பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.இதை முகம் மேல் உதடு,தாடை மற்றும் முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் காயவிடவும்.

பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு தேய்த்து கழுவவும்.இப்படி செய்தால் தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Previous articleகல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு!! பாதுகாப்பு படையில் “கான்ஸ்டபிள்” வேலைவாய்ப்பு!!
Next articleஉயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த இரண்டு பொருளில் தேநீர் செய்து குடியுங்கள்!!