உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழியப் போகிறது. இதுதான் உலகின் உடைய கடைசி நாள் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள், இயற்கை சீற்றங்கள், அதிக வெப்பநிலை என காலநிலை மாற்றங்கள் பல்வேறு விதமாக மாறி வருகிறது. இவை அனைத்தும் உலகம் அழிய போவதற்கான அறிகுறிகள் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகளும் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றனர்.கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடந்திய ஆராய்ச்சியின் முடிவில் உலகில் மனிதர்கள் விலங்குகள் மற்றும் எந்த ஒரு உயிரினங்களும் வாழ முடியாத நிலை ஏற்பட உள்ளதாகவும் கண்டறிந்திருக்கின்றனர்.
விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது போன்று உலகம் முழுவதும் நீரினால் மூழ்கும் என்றும், வெப்பநிலை சராசரியாக 70 டிகிரி செல்சியஸை எட்ட கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இத்தகைய அதிக வெப்ப நிலையில் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பூமியில் கரியமில வாயு அதிகரித்து பூமியை அளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆய்வுக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், கடந்த காலத்தில் இருந்ததை விட இப்போது கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. எதிர்கால பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து பாங்கேயா அல்டிமா என்ற சூப்பர் கண்டம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் உலகில் உள்ள எரிமலைகள் அனைத்தும் கார்பன் டை ஆக்சைடை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால் உலகில் உள்ள மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழிந்து போகும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.