Temple:இந்து கோவிலில் அசைவ பிரியாணியை தீபாவளி பரிசாக வழங்கி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் நகர்ப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் அசைவ பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது. இக் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக போனஸ் மற்றும் பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதனால் கோவில் நிர்வாகத்திடம் பணியாளர்கள் தீபாவளிக்கு துணிகள் , மற்றும் பட்டாசுகள் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டன், சிக்கன் பிரியாணி உடன் புத்தாடைகளை வழங்கி இருக்கிறது.புனிதமான இந்து கோவிலில் மட்டன் ,சிக்கன் பிரியாணி வழங்கி இருப்பது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இது தொடர்பாக புதுவை மாநில கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பெயரில் அக்கோவிலில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த கோவிலில் சில பொருட்கள் திருடு போய் உள்ளது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கோவில் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கு இடையே கலக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
புனிதமான இந்து கோவிலில் அசைவ பிரியாணி தீபாவளி பரிசாக வழங்கி இருப்பது சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மேலும் இந்து மத ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.