எந்த பயிற்சியாளருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு மட்டும்!! பிசிசிஐ செய்தது சரியா??

0
100
Only Gambhir has the authority that no coach has
Only Gambhir has the authority that no coach has

CRICKET: இதுவரை இருந்த இந்திய அணி பயிற்சியாளருக்கு இல்லாத அதிகாரத்தை கம்பீருக்கு அளித்துள்ளது பிசிசிஐ.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இதற்கு முன் பயிற்சியாளராக பணியாற்றிய ரவிசாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அதிகாரங்களை பெற்று இருந்தும் இவர் அதை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை அணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இதற்கு முன் இருந்த பயிற்சியாளர்கள் அணியின் தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் கம்பீரை பயிற்சியாளராக பிசிசிஐ கேட்ட பொழுது அவர் அணியின் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அதிகாரம் கேட்டுள்ளார். அதனை பிசிசிஐ ஏற்றுகொண்டு அவரை நியமித்துள்ளது தெரியவந்துள்ளது.

Only Gambhir has the authority that no coach has
Only Gambhir has the authority that no coach has

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்பீர் தன்னிச்சையாக இரண்டு வீரர்களை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஹர்ஷித் ரான மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இரு வீரர்களை டெஸ்ட் தொடரில் தேர்வு செய்துள்ளார். 2024 ஐ பி எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். இவர்கள் ஐ பி எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுதியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் அளவிற்கு அனுபவம் இல்லை.

தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியால் இவர் எடுத்த அணித்தேர்வு சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் இருந்த இருந்த பயிற்சியாளர்களுக்கு இல்லாத அதிகாரம் கொடுத்ததும் இவர் இந்திய அணியை சரியாக தேர்வு செய்ய வில்லை என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

Previous articleதங்கம் மற்றும் வெள்ளி விலை சமநோக்கு பார்வையில்!! இன்றைய நிலவரம்!!
Next articleபள்ளியில் வாயு கசிவு!!மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்!!அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!