TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் முன்னாள் முதல்வர் ஒருவரின் ஸ்டலை காப்பி அடிப்பதாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாடானது கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் தனது கட்சி கொடி சின்னம் கொள்கை என அனைத்தையும் பற்றி வெளியிட்டார். மேற்கொண்டு அவரது அரசியல் எதிரி யார் என்பது குறித்தும் விளக்கமா கூறினார். இவ்வாறு இருக்கையில் அவர் கட்சி கூட்டம், மாநாடு என அனைத்திலும் பேன்ட் சர்ட் மட்டும் அணிந்து வருகிறார்.
மற்ற அரசியல் வாதிகலைப்போல இல்லாவிட்டாலும் இது புதுவிதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் பாரம்பரியமாக வேட்டியை மட்டுமே அரசியல்வாதிகள் உபயோகித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இவர் மற்ற மாநிலத்துடைய முன்னாள் முதல்வரின் ஸ்டலை காப்பி அடிப்பதாக பல விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
அதாவது இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பின்பற்றுவதாக தெரிவத்துள்ளனர். அவர் அரசியலில் வந்ததிலிருந்து அனைத்து வித இடங்களிலும் பேன்ட் ஷர்ட் மட்டுமே அணிந்து வருகிறார். ஆனால் பலரும் அரசியலில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமென்றெல்லாம் இல்லை. இது அரவரவர் தனிப்பட்ட விருப்பம் என கூறியுள்ளனர்.
மேலும் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், நாம் யாரையும் தனிப்பட்ட முறையாக குறிப்பிட்டு பேசக் கூடாது. அதுமட்டுமின்றி தரம் தாழ்த்தி விமர்சனம் என்பதே இருக்க கூடாது என கூறினார். அத்தோடு தவெக மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் உயிரிழந்ததற்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.