Cricket: kkr அணி என்னை தக்கவைக்கதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது அது எனக்கு கண்ணீர் வரவழைத்தது.
தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறாதது எனக்கு கண்ணீர் வரவழைத்தது என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபலமான தொடர் ஐ பி எல்.
2025ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
இந்த மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த தக்கவைக்கப்பட்ட பட்டியலை அக்டோபர் 31 அனைத்து அணிகளும் வெளியிட்டன.
இதில் kkr அணியில் மொத்தம் 6 வீரர்களை தக்க வைக்க பட்ட பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் ரிங்கு சிங் ரூ.13 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.12 கோடி, சுனில் நரைன் ரூ.12 கோடி, ஆண்ட்ரே ரஸ்ஸல் ரூ.12 கோடி, ஹர்ஷித் ராணா ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் ரூ.4 கோடி என 6 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
kkr அணி 2024ல் ஐ பி எல் கோப்பையை வென்றது. இந்த பட்டியலில் முக்கிய வீரர்களான kkr அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் முக்கிய வீரர் வேங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் தக்கவைக்க படவில்லை. இது kkr ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் kkr அணியை பொறுத்தவரை இது ஒரு முழுமையான குடும்பம். இங்கு இருக்கின்ற 20 அல்லது 25 வீரர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இருக்கின்றன. இந்த நிலையில் என் பெயர் தக்கவைப்பு பட்டியலில் இல்லை என்ற போது எனக்கு கண்ணீர் வந்தது.