வீட்டு டைல்ஸை புதிது போன்று பளிச்சிட செய்யும் டெக்னிக்!! மூன்று பொருட்கள் போதும்!!

0
103
A technique that makes home tiles shine like new!! Three ingredients are enough!!
A technique that makes home tiles shine like new!! Three ingredients are enough!!

இல்லத்தரசிகளுக்கு இருக்கின்ற பெருங்கவலை வீட்டை சுத்தம் செய்வது தான்.டைல்ஸில் ஒட்டியிருக்கும் பிடிவாதமான அழுக்கு கறைகளை நீக்குவதற்குள் அனைவரும் சோர்வாகிவிடுகின்றனர்.இதனாலேயே பலருக்கு வீடு துடைப்பதை நினைத்து சோர்வாகிவிடுகின்றனர்.ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றினால் டைல்ஸில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி புதியதாக பளிச்சிடும்.

குறிப்பு 01:

1)எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோல்
2)பேக்கிங் சோடா
3)வினிகர்

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் நிரப்பி ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்துவிடுங்கள்.

பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.பிறகு எலுமிச்சை தோலை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எலுமிச்சை சாறு கலந்துள்ள நீரில் சேர்த்து கொள்ளுங்கள்.இதை கொண்டு டைல்ஸை துடைத்தால் கறைகள் நீங்கி புதியது போன்று பளிச்சிடும்.

குறிப்பு 02:

1)கல் உப்பு
2)எலுமிச்சை சாறு
3)வெந்நீர்

பிளாஸ்டிக் வாலியில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளுங்கள்.அடுத்து வெந்நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதை கொண்டு டைல்ஸை துடைத்தால் கறைகள் நீங்கி புதியது போன்று பளிச்சிடும்.

குறிப்பு 03:

1)வெள்ளை வினிகர்
2)எலுமிச்சை சாறு

25 மில்லி வெள்ளை வினிகர் மற்றும் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து வீட்டு டைல்ஸை துடைத்தால் அழுக்கு கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Previous articleதிருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து தப்பி தவறியும் இந்த பொருட்களை எடுத்து வந்துவிடாதீர்!!
Next articleதஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!