TAMILNADU:என்எம்டிசி நிறுவனம் 153 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
என்எம்டிசி நிறுவனம் என்பது அரசு சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஒரு பெரிய அளவிலான வேலை வாய்ப்பினை அறிவித்து உள்ளது. அதில் கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் படித்தவர்களுக்கு கேன 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உட்பட பிற விவரங்கள் கொண்ட அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் அக்டோபர் மாதம் 21 தேதி வெளியாகியது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 10 ஆகும். இந்த பணிக்கு nmdc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் காலிப்பணியிடங்கள் கமர்ஷியல்- 4, ஜியோ மற்றும் கியூசி- 3, சுற்றுச்சூழல்- 1, சுரங்கம்- 56, சர்வே- 9, கெமிக்கல்- 4, எலக்ட்ரிக்கல்- 44, சிவில்- 9, ஐஇ- 3, மெக்கானிக்கல்- 20 முதலிய எண்ணிக்கையில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாயாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு , மேற்பார்வை திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சம்பளத்தை போருத்தா வகையில் வேலையில் சேர்ந்த ஒரு வருடத்திற்கு 37,000 ரூபாய் வழங்கப்படும் என்எம்டிசி நிறுவனம்.
அதன் பிறகு ரூ 75,000 வரை சம்பளம் கொடுக்கப்படும். என்றும் ,மேலும் பயிற்சி காலம் முடிந்ததும் ரூ.1 லட்சம் வரை தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.