Tamilnadu Gov: ரேஷன் அட்டை தாரர்கள் தங்களின் KYC விவரங்களை விரைவில் இணைக்கும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு மிகவும் மலிவான விலையில் நியாய விலைக் கடை மூலம் மக்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இதில் மத்திய அரசின் சிறப்பு வழங்கீடு மூலமும் கோதுமை உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இதனை பயன்படுத்தி பலரும் இரு ரேஷன் கார்டு உபயோகித்து வருகின்றனர்.
இதனை கண்டறியும் நோக்கில் ரேஷன் கார்டுடன் தங்களது KYC விவரங்களை இணைக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்தது. மேற்கொண்டு இணைக்காதவர்களின் ரேஷன் கார்டானது ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இம்மாதம் மேற்கொண்டு கூடுதல் கால அவகாசமானது இந்த கேஒய்சி இணைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுத்த கால அவகாசத்தில் தங்களது விவரங்களை இணைத்துக் கொள்ளும்படி மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கொண்டு இதனை இணைப்பதன் மூலம் போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் அதன் எண்ணிக்கையும் குறையும். இதனால் அனைவருக்குமான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி தற்பொழுது பெய்து வரும் பருவ மழையால் மக்களுக்கு போதுமான அளவு ரேஷன் பொருட்கள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவை அனைத்தும் மழையில் நினையாத படி பாதுகாப்பு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனால் எந்த ஒரு தட்டுப்படியின்றி மக்களும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.