இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மட்டும் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் அஜாஸ் பட்டேல் ஒரு நல்ல பவுலரே இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஆனால் அவர் 3 வது போட்டியில் மட்டும் 11 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி ஆறுதல் வெற்றி கூட பெற முடியாத நிலைக்கு காரணம் இவர்தான்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பதிவு ஒன்றில் அஜாஸ் பட்டேல் போன்ற சுமாரான பவுலர் அனைத்து கிளப் ளும் இருக்கின்றனர், அவர் ஒரு நல்ல பவுலர் கிடையாது அவரிடம் அனைவரும் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். அவர் ஒரு ஓவருக்கு 2 நல்ல பந்துகள் மட்டுமே வீசுகிறார். அவரை தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் அவரும் பகுதி நேர பவுலர். மேலும் நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசினார் என்று கூறினார்.