இந்திய அணி தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து உடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து இந்த மாதம் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான தோல்வி குறித்து பலரும் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதற்கு காரணம் கம்பீர் தான் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அதில் இந்த நியூசிலாந்து உடனான தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கடும் நெருக்கடியாக அமைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. எனவே இந்த போட்டியை சரியான முறையில் கம்பீர் வழிநடத்த வேண்டும்.
ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீரின் சராசரி 22 தான். அவரே ஆஸ்திரேலியா மண்ணில் தடுமாறுவார் இந்த நிலையில் இவர்தான் அணி வீரர்களுக்கு எவ்வாறு விளையாட வேண்டும் என்று சொல்லி தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கம்பீர் தலைமை ஏற்ற பின் நீண்ட நாட்களுக்கு பின் இலங்கை அணியுடன் தோற்றது, சொந்த மண்ணில் நியூசிலாந்து உடன் தோல்வியடைந்தது இதுவே என் கண்ணுக்கு தெரிகிறது என்றும் கூறியிருந்தார்.