சேலம்: பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த பெண் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை.
சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் இவர் டிரைவராக வேலை செய்கிறார். அவரின் தங்கை கமலேஸ்வரி மற்றும் இவர்களின் உறவினர் ஹரி கிருஷ்ணன். இதில் கமலேஸ்வரி யின் மகன் கரூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தீபாவளி முடிந்து கரூர் செல்ல வழி அனுப்பி வைக்க சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
கார்த்திக்,கமலேஸ்வரி மற்றும் ஹரி கிருஷ்ணன் காரை ஓட்டி வந்துள்ளார். இவர்கள் குரங்கு சாவடியில் இருந்து மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர் அப்போது அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் சரவணவேலன் அவர்களை நிறுத்தி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது இதனால் பேருந்து நிலையத்திற்குள் அனுமதி இல்லை திரும்பி செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் ஏன் உள்ளே போக கூடாது என வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் எஸ் ஐ மற்றும் கமலேஸ்வரி இடையே வாக்குவாதம் முற்றி போனது. இதில் உணர்ச்சிவசப்பட்ட அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் சரவணவேலனை காலில் இருந்த செருப்பை எடுத்து இரண்டு முறை அடித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து சப் இன்ஸ்பெக்டர் சரவணவேலன் பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பணியில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பெரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.