இந்தியா நியூசிலாந்து தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த பின்னும் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும் வரை நாங்கள் பயத்தில் இருந்தோம் என்று உண்மையை கூறியுள்ளார் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல்.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் அடித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இந்திய அணி 147 ரன்களை துரத்தியது இதில் முக்கிய வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் ரிஷப் பண்ட் தனி ஆளாக அணியின் வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முயன்றார். அதைப் பற்றி கூறிய அஜாஸ் பட்டேல் அவர் ஒரு சிறந்த வீரர் அவர் களத்தில் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றி பெற முடியுமா என்ற பயம் இருந்தது. அவரை பொறுத்தவரை களம் எதுவாக இருந்தாலும் ஆட்டம் அவர் நினைப்பது தான்.
இந்தியா ஆஸ்திரேலியா குறித்து பேசிய அவர் மற்ற மைதானங்களை விடவும் ஆஸ்திரேலியா மிகவும் வேறுபட்ட வித்தியாசமானதாக இருக்கும். அங்கு நமக்கு எந்த சாதகமும் இல்லை மனதளவில் நாம்தான் உத்வேகத்துடன் செல்ல வேண்டும். அங்கு பல இந்திய வீரர்கள் விளையாடி உள்ளனர். இந்த தோல்வி அவர்களுக்கு அந்த போட்டியில் வெற்றி பெற உதவும் என்று கூறியுள்ளார்.