cinema: ஜெயம்ரவி நடித்த பிரதர் திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து 5 படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்துள்ளது.
தீபாவளி என்றாலே பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த முறை தீபாவளிக்கு பெரிய ஹீரோக்கள் திரைப்படம் எதுவும் வெளியாக வில்லை. என்றாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் , கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் பல திரைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்துள்ளது. அவருக்கு தொடர்ந்து தோல்வி படங்களாகவே அமைகின்றன.
இதற்கு முன் கோமாளி படம் தான் மிகபெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் இந்த திரைப்படம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியானது. அதன் பின் நடித்த பூமி, அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தீபாவளிக்கு வெளியான பிரதர் திரைப்படமும் தோல்வியடைந்துள்ளது.
ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் அத்திரைப்படம் வெளியான போதே தமிழ்நாட்டில் 25 கோடி ஷேர் கிடைத்திருந்தது. ஆனால் பிரதர் படத்திற்கு 4 கோடி தான் ஷேர் கிடைத்தது இதுவே ஜெயம் ரவி நடித்த படங்களில் குறைவான வசூல் ஈட்டிய திரைப்படம் என கூறுகின்றனர். அடுத்த திரைப்படமாவது கை கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.