IPL: வாசிங்க்டன் சுந்தர் மற்றும் சஹால் இருவரையும் மும்பை அணி வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆண்டு முதல் மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போலவே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான மோதல் களையும் முடித்து வைத்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் அக்டோபர் 31 ம் தேதி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ரா ரூ.18 கோடிக்கும், சூர்யகுமார் யாதவ் ரூ.16.35 கோடிக்கும், ஹர்திக் பாண்டியா ரூ.16.35 கோடிக்கும்,திலக் வர்மா ரூ.8 கோடிக்கும் தங்கவைக்கப்பட்டனர்.
மும்பை அணி முக்கிய வீரர்களான விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மற்றும் டிம் டேவிட் விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி மீதம் ரூ.45 தொகை வைத்துள்ளது. அதில் இரண்டு வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கும், புதிய விக்கெட் கீப்பரை வாங்க திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் ஜாஸ் பட்லர், பிலிப் சால்ட் போன்ற வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை வாங்கவுள்ளது.
மேலும் அணியில் ஸ்பின்னர்களாக இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வாஷிங்டன் சுந்தரை வாங்க அதிக அணிகள் போட்டியிடும், மேலும் இஷான் கிஷன் வாங்க முயற்சித்தாலும் மற்ற அணிகள் அவரை வாங்கவே அதிக வாய்ப்புள்ளது.