EDUCATION LOAN:22 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வழங்க “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை.
இந்திய நாட்டில் மாணவர்கள் கல்வி பயில மற்றும் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அமைச்சரகம். மத்திய அமைச்சரகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு , குறைந்த வட்டி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை.
இந்த திட்டத்தின் மூலம், 22 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும். மேலும் இத் திட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களுக்கு இத் திட்டம் பயனளிக்கும். மேலும் இத் திட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கிறது, அந்த வகையில் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் கீழ் உள்ள ஒரு முக்கிய அம்சமாகும். மாணவர்களுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் முறையில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில் அடமானம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன்கலாக இருக்கும். திறமையான மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேர நிதி தட்டுப்பாடு ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்து இருக்கிறது . “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்காக 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தில் பயன்பெற ஒருங்கிணைந்த இணையதளத்தில் மாணவர்கள் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.