ADMK DMK: சாதி கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசிய ஊடகவியாளர் ரவீந்திரன் துரைசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஒன் டிஜிட்டல் ஊடகம் ரவீந்திரன் துரைசாமி அதிமுக முன்னாள் தலைவர்களின் சாதியை சுட்டிக்காட்டி ஜாதி கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கடந்த வருடம் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேட்டியளித்திருந்தார். குறிப்பாக வெள்ளாள கவுண்டர் இருக்க வேண்டிய பூத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாகவும், வன்னியர் பூத்திலும் நூறு ஓட்டுக்கள் மட்டும் தான் முன்னணி இதை வைத்து பார்க்கையில் அதிமுகவிற்கு வெள்ளாளர் மற்றும் வன்னியர்களின் சாதி வாக்கு தான் அதிகம் பிற மொழி பேசுபவரின் வாக்குகள் கிடையாது.
மேலும் ஜாதி தலைமை, அபகரிக்கும் தலைமை, சூறையாடும் தலைமை என அடுக்கு மொழியில் பேசியதோடு இவ்வாறு தான் மற்ற சாதியினர் நினைக்கின்றனர் என மற்றவர்களை தூண்டிவிடும் விதமாகவும் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி மாஜி அமைச்சர் சி.வி சண்முகம் குறித்தும் தவறான பொய் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இவ்வாறு அவர் பேசியதற்கு மாஜி அமைச்சர் சி வி சண்முகம் திண்டிவனம் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவருக்கு பின்னணியில் திமுக தனது முழு ஆதரவையும் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்யாததால் மேற்கொண்டு நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்தார்.
ஆனால் அதற்கேற்றார் போல் ரவீந்திரன் துரைசாமி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனும் கிடைத்துள்ளது. மக்களிடையே சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய நபர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி இதிலிருந்து வெளியேறுவது மிகவும் கண்டனத்திற்குரியது என பலரும் கூறி வருகின்றனர்.