மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Project Technical Support-III,Project Nurse-II பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு கல்வித் தகுதி,வயது வரம்பு மற்றும் ஊதியம் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: ஜிப்மர் ஆணையம்(JIPMER)
பணியின் பெயர்:
1)Project Technical Support-III
2)Project Nurse-II
காலிப்பணியிடங்கள்:
Project Technical Support-III,Project Nurse-II பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் Master’s in Medical social work / ANM / GNM / BSC / ICU nursing உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயது தகுதி 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.33,040 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
1)எழுத்து தேர்வு
2)நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் [email protected] என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: Project Technical Support-III,Project Nurse-II பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி தேதியாகும்.