நம் அனைவரும் வெவ்வேறு சருமத்தை கொண்டிருக்கிறோம்.எண்ணெய் பசை சருமம்,வறண்ட சருமம்,மிருதுவான சருமம் என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.இதில் சருமத்தில் எண்ணெய் வழியும் நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு போக்க முயலுங்கள்.
1)ஓட்ஸ்
2)லெமன் சாறு
முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்க ஓட்ஸ் பேக் ட்ரை பண்ணலாம்.அதற்கு முதலில் மூன்று தேக்கரண்டி அளவு ஓட்ஸ் எடுத்து லேசான சூட்டில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு நன்றாக அப்ளை செய்து உலரவிடுங்கள்.அதன் பிறகு ஒரு கப் குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து முகத்தில் உள்ள ஓட்ஸ் பேக்கை துடைத்தெடுக்கவும்.இப்படி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.
1)முட்டையின் வெள்ளைக்கரு
2)லெமன் சாறு
முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருந்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை நுரை வரும்வரை நன்றாக கலக்குங்கள்.அதன் பின்னர் எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக நறுக்கி அதன் சாற்றை வெள்ளைக்கரு உள்ள கிண்ணத்திற்கு பிழிந்து கலக்கி கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு உலர விடுங்கள்.பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள்.இப்படி அடிக்கடி செய்தால் முகத்தில் எண்ணெய் வழிவது நிற்கும்.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)லெமன் சாறு
ஒரு பௌலில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி லெமன் சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் டிப் செய்து முகத்தில் ஒத்தி எடுங்கள்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் எண்ணெய் வழிவது நிற்கும்.