பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கனடா அரசு!! கண்டனம் தெரிவித்த இந்தியா!!

0
110
Canadian government protested press freedom!! Condemned India!!
Canadian government protested press freedom!! Condemned India!!

ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று கனடா அரசிற்கு கூறியுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், எத்தனை தடை வந்தாலும் மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் உண்மையாகவும் சொல்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கை சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் இப்பொழுது எங்களுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது என்றும், என்றைக்கும் வெளிப்படை தன்மையுடன் தான் நாங்கள் இருப்போம் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் கனடா இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்து ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நேர்காணலில் பேசி இருந்தார். மேலும் அவரிடம் இந்தியா – கனடா இடையேயான உறவு குறித்தும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களையும் வழங்கினார்.

இவருடைய நேர்காணலை ஆஸ்திரேலியா டுடே ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் அன்று கனடா அரசு இந்த ஊடகத்தினை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்திய அரசும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது :-

இது எங்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கிறது. மேலும், விசித்திரமாகவும் உள்ளது. கருத்து சுதந்திரம் சார்ந்த கனடாவின் பார்வையை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை துறை அமைச்சர் மூன்று விஷயங்கள் குறித்து ஊடகத்துடன் பேசி இருந்தார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் கனடா குற்றச்சாட்டு வைப்பதாக அவர் சொல்லி இருந்தார். அதே போல கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளை கண்காணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இந்தியா கனடா இடையே பல கருத்து வேறுபாடுகள் மாறி மாறி நிகழ்ந்து வரும் இத்தருணத்தில் கனடா அரசின் இந்த கருத்து சுதந்திர தடைக்கான உத்தரவு மேலும் அதனை வலுப்படுத்துவதாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous articleராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தவெக தலைவர்!!
Next articleதோனியால் கூட முடியாததை செய்து முடித்த சஞ்சு சாம்சன்!! சாதனைகளை அடுக்கிய அபாரமான சதம்!!