உங்களில் சிலர் வீடுகளில் எலி பிரச்சனையை சந்தித்து வருவீர்கள்.இந்த எலிகளால் பல ஆபத்தான நோய் பாதிப்புகள் பரவும் என்பதால் வீட்டில் அதன் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே வீடுகளில் நடமாடும் எலிகளை விஷ மருந்து இன்றி எளிதில் விரட்ட இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள்.
குறிப்பு ஒன்று
*புதினா எண்ணெய்
ஒரு ஸ்ப்ரேயரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதை வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து விடுங்கள்.இப்படி செய்தால் அதன் தொல்லை கட்டுப்படும்.
குறிப்பு இரண்டு
*பூச்சுருண்டை
இரண்டு அல்லது மூன்று பூச்சுருண்டை அதாவது அந்துருண்டையை இடித்து எலி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவிவிட்டால் அதன் தொல்லை நீங்கும்.
குறிப்பு மூன்று
*நாட்டு மாட்டு சாணம்
நாட்டு மாட்டு சாணத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.இந்த சாணப் பொடியை வீட்டை சுற்றி தூவிவிட்டால் அதன் நடமாட்டம் கட்டுப்படும்.
குறிப்பு நான்கு
*பிரிஞ்சி லீப்
பிரியாணிக்கு பயன்படுத்தும் பிரிஞ்சி இலையை பொடித்து வீட்டின் மூலை முடுக்கில் தூவிவிட்டால் எலி நடமாட்டம் கண்ட்ரோல் ஆகும்.\
குறிப்பு ஐந்து
*பேபி பவுடர்
வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் பேபி பவுடரை கொட்டி வைத்தால் அதன் தொல்லை ஒழியும்.
குறிப்பு ஆறு
*பெரிய வெங்காயம்
வீட்டில் எலி போந்து உள்ள இடத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைத்தால் அதன் தொல்லை கட்டுப்படும்.
குறிப்பு ஏழு
ஒரு கைப்பிடி மிளகை இடித்து நீரில் கலந்து எலி நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.