Supreme Court:உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் கன்னா பதவியேற்பு.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் 50 வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு 2022 -யில் பதவியேற்றார். இந்த பதவியை ஜனாதிபதி தான் வழங்குவார்கள். இவராது பதவி காலம் நவம்பர் 10ஆம் தேதி நேற்றுடன் முடிவு பெற்றது. அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்ஜீவ் கன்னாவை பரிந்துரை செய்தார். மேலும் தன் பதவி காலம் முடிவு பெறுவதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதினார் நீதிபதி சந்திரசூட். அதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி செய்வதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
மேலும் அடுத்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிக்கான தனது பரிந்துரையை உச்ச நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் இவரது பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம். இதனால் உச்ச நீதிமன்றத்தில் 51 வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவர்
இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13ம் தேதி வரை இருக்கிறது.