DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும் இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
மேலும் தமிழா நாடு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள 39 விடுதிகளில் தங்கி படிக்கும் 2600 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கும் தொடக்கமாக 553 வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய இருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி, அப்போது செய்தியாளர்கள் அவரிடம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசின் திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு அரசு சார்பில் யார் பங்கு பெறுவார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதிலாக , “என்னை அழைத்தால் நான் நேரடி விவாதத்திற்கு செல்வேன்” என்று கூறினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மேலும் அரசு திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்கிறீர்களே, என்று விமர்சனம் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘யார் பெயரை வைக்க வேண்டுமோ’ அவர்களது பெயரைத்தான் வைத்து இருக்கிறோம் என்று பதில் கூறினார்.