IPL: CSK அணியில் தோனி இடத்தை நிரப்ப ஒரு விக்கெட் கீப்பர் தேவை எனவே யாரை ஏலத்தில் எடுப்பது என்ற குழப்பத்தில் CSK அணி நிர்வாகம்.
ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டிக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் CSK அணி தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ஆனால் இவர் முழு நேரமாக விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே CSK அணி நிர்வாகம் கட்டாயம் ஒரு கீப்பர் பேட்ஸ்மேன் வாங்க உள்ளது. தற்போது நன்றாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் மீது குறிவைத்துள்ளது CSK அணி நிர்வாகம்.
ஆனால் பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.110 கோடி தொகையை வைத்து ஏலத்தில் பங்கேற்க உள்ளது எனவே முறை முக்கிய வீரர்களை பஞ்சாப் அணி வாங்க நினைக்கும் அந்த வகையில் ரிஷப் பண்ட் க்கு போட்டியிடும். அடுத்ததாக கே எல் ராகுல் இவரும் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இவரையும் CSK வாங்க முயற்சிக்கும் ஆனால் இவருக்கு போட்டி அதிகமாக இருக்கும். மேலும் RCB அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக இஷான் கிஷான் இவருக்கும் போட்டி அதிகமாக இருக்கும். ஜிதேஷ் சர்மா தான் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு வேலை இவர்களில் யாரையும் வாங்க முடியாத பட்சத்தில் உள்ளூர் வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டி இருக்கும்.