தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக விளங்குபவர் மணிரத்தினம் அவர்கள். தன்னுடைய படங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் ஒவ்வொரு படத்தினையும் இவர் செதுக்கியிருப்பார் என்று கூறலாம்.
இவர் பல நடிகர்களை வைத்து படம் எடுத்த பொழுதிலும், பெரும்பாலான கதைகளை இவர் எழுதும் பொழுது தன்னுடைய மனதில் சிம்புவையே நினைத்து எழுதுவாராம்.
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் இவருடைய கதைகளும் சற்றே மாறுபட்ட படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இயக்குனர்களின் வேலை என்பது கதையையும் காட்சியையும் ஒருங்கிணைப்பது என இல்லாமல் கேமராவினுடைய ஆங்கில் சரியாக உள்ளதா திரைகதையின் பிரேம்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்க வேண்டும் என இவர் ஒவ்வொன்றிற்கும் தனி கவனிப்பு கொடுத்து செதுக்கி இருப்பார். இவருடைய படங்களில் நடித்து விட மாட்டோமா என பல நடிகர்களும் ஏங்கிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய படங்களில் பல நடிகர்களை வைத்து படம் எடுத்தாலும் இவருடைய செல்லப்பிள்ளை என்று சிம்புவையே குறிப்பிடுகின்றார். இதற்கு உதாரணமாக, செக்க சிவந்த வானம் வானம் படத்தில் சிம்புவிற்காக அவர் ஒரு காட்சியினை எடுத்துள்ளார். படத்தை எடுத்த செய்யும்போது சிம்புவின் சில காட்சிகள் நேரத்தின் அடிப்படையில் தூக்க வேண்டிய நிலை வந்த பொழுது சிம்புவை விட மிகவும் அதிகமாக மணிரத்தினம் அவர்கள் வருந்தியுள்ளார். இது மற்ற நடிகர்களை சிம்புவின் மீது பொறாமை பட செய்வதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படவிழாவின் போது படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வந்த பொழுது அமைதியாக இருந்த கூட்டம் அந்த படத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத சிம்பு அவர்கள் வந்த பொழுது ஆர்ப்பரிக்கப்பட்டது என தொகுப்பாளர் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள் மொழி வர்மனாக முதலில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிம்பு தான். சிம்பு இந்த படத்தில் நடித்தால் நாங்கள் இந்த படத்தை விட்டு விலகிக் கொள்கிறோம் என பல முன்னணி நடிகர்கள் கூறியதால் வேறு வழி இன்றி அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவி அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார் மணிரத்தினம் அவர்கள்.