தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
105

TN Government: தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் வேலை தேடிக் கொண்டுடிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, கல்லூரி மாணவர்களுக்காக  நான் முதல்வன்  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதும், மாநிலத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதும் ஆகும். மேலும் இந்த திட்டம் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் 2.2 லட்சத்திற்கு அதிகமானோர் டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களில் பணியமர்த்தி உள்ளனர். மேலும் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள போஸ்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு  21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட 12 மாத Internship வசதிகளை ஏற்படுத்தித்
தர உள்ளது. அது மட்டும் அல்லாமல் மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. www.naanmuthalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவர்கள் பயன்பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநடிகர் கமலஹாசன் அவர்கள் உலக நாயகன் பட்டத்தை துறந்ததற்கான காரணம்!!
Next articleஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!