பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

0
98
The district administration has given a local holiday for Mayiladuthurai district on November-15
The district administration has given a local holiday for Mayiladuthurai district on November-15

Mayiladuthurai:மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு நாளை நவம்பர்-15  அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றுக்கரையில் துலா உற்சவம்  மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெறக்கூடிய பெரிய திருவிழாவாகும்.

அதாவது துலா உற்சவம் என்பது மயிலாடுதுறையில் உள்ள பெரிய கோவில், வள்ளலார் கோவில் , பரிமளா ரங்கநாதர் கோயில் , ஐயாரப்பர் கோயில் மற்றும் நான்கு காசி விஸ்வநாதர் கோவில்களில்  விழாக்கள் மிக விமரிசையாக   நடைபெறும், இந்த விழாக்கள் ஐப்பசி மாதம் முழுவதும் 30 நாட்கள் நடைபெறும்.

மேலும்  இந்த  விழாக்களின் இறுதி நாளாக நாளை காவிரி கரையில் உள்ள துலா கட்டம் என்ற பகுதில் கோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் புனித நீராடுவதற்கு கொண்டு வரப்பட்டு , புனித நீராடுவார்கள் பக்தர்கள். அவ்வாறு புனித நீராடினால் தங்கள் செய்த பாவங்கள் நீக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இதனை முன்னிட்டு நாளை நவம்பர்-15 அன்று  பள்ளிகள், கல்லூரிகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகின்ற நவம்பர்-23 சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து இருக்கிறார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி.

Previous articleகேதார் ஜாதவ் போல தான் ரிங்கு சிங்!! தொடர்ச்சியான சொதப்பல் ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்!!
Next articleஅரசு மருத்துவர் மீது தாக்குதல்!! தமிழகம் முழுவதும் எழுந்த புதிய ரூல்ஸ்!!