சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை வைத்து 14.11.2024 அன்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என்றும் மற்ற நோயாளி பிரிவுகள் செயல்படாது என்றும் மருத்துவ சங்க தலைவர் கூறியிருந்தார்.
இந்த போராட்டத்தின் விளைவாக இன்று பல நோயாளிகள் சிரமம் அடைந்து உள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவர்கள் கோரிக்கை அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனித்து கொள்ள வருபவர்களுக்கு அவர்களின் கையில் ஒரு டேக்(Tag) கட்டப்படும். மேலும் அந்த டேக் கையில் இருந்தால் மட்டும் தான் சிகிச்சை பெரும் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த டேக்-இல் அவர் எந்த நோயாளியை பார்க்க வந்தவர், அவர் எந்த ward-க்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்டு இருக்கும். இந்த முறை ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்திய பிறகு அனுமதி இல்லாமல் யாரும் மருத்துவமனைக்குள் உள்ள வார்டுக்குள் செல்ல முடியாது என தெரிவித்துள்ளது.