நம் ஒவ்வொருவருக்கும் அழகான புன்னகை இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.ஆனால் பற்களில் அழுக்கு,மஞ்சள் கறைகள் இருந்தால் புன்னகை செய்ய தயக்கம் ஏற்படும்.அது மட்டுமின்றி பற்களில் படியும் கறைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.எனவே பல் மஞ்சள் கறை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கல் உப்பு
2)எலுமிச்சை தோல்
பயன்படுத்தும் முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரையும் வரை கலக்குங்கள்.
அதற்கு அடுத்து எலுமிச்சை தோலை அதில் டிப் செய்து பற்களின் மீது வைத்து தேய்க்கவும்.இப்படி ஐந்து நிமிடங்கள் வரை தேய்த்த பிறகு வெது வெதுப்பான நீர் கொண்டு வாயை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் இருவேளை செய்து வந்தால் பற்களில் மீது படிந்துள்ள மஞ்சள் கறைகள் எளிதில் வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)ஆரஞ்சு பழ தோல்
2)தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் அளவிற்கு ஆரஞ்சு பழ தோலை எடுத்து வெயிலில் போட்டு நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள்ளுங்கள்.
பிறகு ஆரஞ்சு பழ தோல் பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பற்களை தேய்த்து சுத்தம் செய்யவும்.இதுபோன்று தினமும் பற்களை சுத்தம் செய்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)பேக்கிங் சோடா
2)எலுமிச்சை சாறு
பயன்படுத்தும் முறை:
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.இதை வைத்து பற்களை துலக்கி வந்தால் மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)பூண்டு பல்
2)தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை:
இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.இதை வைத்து பற்களை தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.