ஏழு மாத கைக்குழந்தையுடன்  ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம்!!  ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம்!!

Dindivanam:திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏழு மாத கைக்குழந்தையுடன்  ஒரே குடும்பத்தினர் பலர் ரயிலில் ஏறும்போது கால் தடுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது .

நாளை,கிருத்திகை  என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது வழக்கம், அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தொள்ளார் பகுதியில் வசித்து வருபவர் சங்கர்  மற்றும் அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், மற்றும் 7 மாதக் குழந்தை கிருத்திகா  மற்றும் அவர்களது உறவினர்கள் காயத்ரி, சங்கீதா ஆகியோர் திருச்செந்தூர் செல்ல முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதனால், திண்டிவனத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்செந்தூர் செல்ல புறப்பட்டு திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ` திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முற்படும்போது, கால் தவறி ரயில் பெட்டிக்கு அடியில் தண்டவாளத்தில்  எழு மாத கைக்குழந்தை  கிருத்திகா ,கோமதி ,மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகியோர் சிக்கினார்கள்.

இதை கண்டு அதிர்ந்த போன சக பயணிகள்  அபாய சங்கிலியை  இழுத்து ரயிலை நிறுத்தினார்கள். இதனால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். ரயிலை எந்தவித அறிவிப்பும் இன்றி இயக்கியதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் பயணிகள் ரயில்வெ அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில்  ஈடுபட்டனர்.

இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனால்  திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்  10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு உள்ளது.  ரயில் நிலையங்களில் பயணிகள் கவனமாக செயல்பட வேண்டும்.