Aadhar: ஆதார் அட்டை அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். அந்த அட்டையில் நமக்கு தேவையான தகவல்களை திருத்தம் செய்ய ஒரு முக்கிய விதிமுறைகள் உள்ளது.
ஆதார் அட்டை ஒரு தனி மனித அடையாளம். இந்த அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய முடியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஆவணமாக மாறியதால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் மிக சரியாக இருக்க வேண்டும்.
அதனால் தான் அரசு ஆதார் கார்டு முக்கியமாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் பதிவான பெயரை வாழ்நாள் முழுவதும் இரண்டு முறை மாற்றலாம். மேலும் பெயரை மாற்ற UIDAI ஒப்புதல் தேவை. அது மட்டும் அல்லாமல் எதற்காக பெயர் மாற்றப்படுகிறது என்பதற்கான சான்றுகள் கட்டாயம் வழங்க வேண்டும். இந்த பெயர் மாற்றத்திற்கு மட்டும் விதிமுறைகள் உள்ளன. அதை தவிர முகவரி, செல்போன் போன்ற தகவல்கள் மாற்ற எந்த ஒரு விதிமுறையும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் ஆதாரில் ஏதேனும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றால் டிசம்பர்-14, 2024 வரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. மேலும் அரசின் அனைத்து மானியத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. எனவே ஆதார் அட்டை அப்டேட் செய்வது மிக முக்கியமாகும்.